பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 கென்யா ராணுவ வீரர்கள் பலி!
#world_news
#Attack
#GunShoot
#Terrorist
#Tamilnews
#Kenya
#Killed
Mani
2 years ago

வடகிழக்கு கென்யாவில் அமைந்துள்ள கரிசா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது படையினரை ஏற்றிச் சென்ற வாகனம் வீதியில் சென்ற இனந்தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதுண்டு அதனைத் தொடர்ந்து வெடிக்கச் செய்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மறைந்திருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன், தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தின் போது மூன்று இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கென்யாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதலில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



