தூத்துக்குடி அருகே 40 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி!
#India
#Terrorist
#2023
#Tamilnews
Mani
2 years ago

தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு வெற்றிலை, மஞ்சள், கஞ்சா போன்ற சட்டவிரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் கடலோர காவல்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.



