கட்சிகளுக்குள் தனித்தனி பிரச்சினைகள் இருந்தாலும், அரசாங்கத்தை சேர்ந்தே நடத்துவோம் - சந்திரசேன
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி எனவும், அந்தக் கட்சியை பலப்படுத்தி வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரண்டு கட்சிகளுக்கும் இரண்டு பிரச்சினைகள் இருப்பதாகவும், அரசாங்கத்தை நடத்துவது என்பது தனியான பிரச்சினை எனவும், அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கட்சிகளை கட்டியெழுப்புவதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிக வாக்குகளை பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.