அமெரிக்காவில் தம்பதிகளிடையே பிரபலமாகி வரும் தூக்க விவாகரத்து!

அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் தூக்க விவாகரத்து (Sleep divorce) முறையை தெரிவு செய்வதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் நடத்திய இந்த ஆய்வில் 2000 பெரியவர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தூக்கத்தின் போது மாத்திரம் தங்களது துணையை விவாகரத்து செய்ய விரும்புவதாக பதிலளித்துள்ளனர்.
"ஆண்கள் பெரும்பாலும் சோபா அல்லது விருந்தினர் அறையைத் தேர்ந்தெடுப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நுரையீரல் நிபுணரான வைத்தியர் சீமா கோஸ்லா, மோசமான தூக்கம் உங்கள் மனநிலையை மோசமாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கத்தை சீர்குலைக்கும் நபர் மீது சில மனக்கசப்புகள் இருக்கலாம், இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
"ஒரு நல்ல இரவு தூக்கம் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமானது, எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நலனுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை." தூக்க விவாகரத்து உண்மையில் தம்பதிகள் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று ஆய்வை வெளியிட்டுள்ள இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஸ்லீப் விவாகரத்து' என்பது இப்போது டிக்டொக்கில்பிரபலமான சொற்றொடராக காணப்படுவதுடன், பல தம்பதிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



