தாய்லாந்து பிரதமர் பதவி விலகுகிறார்....

#PrimeMinister #world_news #Resign
தாய்லாந்து பிரதமர் பதவி விலகுகிறார்....

தாய்லாந்து பிரதமர் பியுத் சான்-ஒச்சா தனது 9 ஆண்டு கால் பொறுப்பின் பின்னர் அரசியலில் இருந்து தான் ஒய்வு பெறுவுதாக அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரின் தலைமையிலான ஐடிஎன் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

 இது குறித்து தனது முகநூல் பதிவில் பிரயுத் கூறியுள்ளதாவது: யுடிஎன் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

 கட்சியின் பிற தலைவர்களும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று தனது முகநூல் பதிவில் பிரயுத் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த 2014-ஆம் ஆண்டில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிரயுத் ஓச்சா, அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றினார்.

 இதன் பின்னர் 2019-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி 23.34 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.ஆயினும், இந்த ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தலில் அவரது கட்சி 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!