இன்று யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு இடம்பெறுகிறது
#SriLanka
#Jaffna
#President
#இலங்கை
#ஜனாதிபதி
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தெரிவு இன்று (12.) இடம்பெறவுள்ளது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, முகாமைத்துவ வணிக பீட முன்னாள் பீடாதிபதி வேல்நம்பி, பட்டப்படிப்புகள் பீட பேராசிரியர் S.கண்ணதாசன் ஆகியோர் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்தும், விலங்கியல் பேராசிரியர் வினோபா, கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்தும் போடியிடுகின்றனர்.
இவர்களில் அதிக வாக்குகளை பெற்ற மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.
பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதி அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையால் முன்மொழியப்பட்ட பெயர்களிலிருந்து ஒருவரினை ஜனாதிபதி துணைவேந்தராக தெரிவு செய்வார்.