ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படாது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாது என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமைச்சுப் பதவிகளை கோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனியான குழுவொன்றை அமைத்து பொறுப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளபோதிலும், அவர்கள் அந்த பதவிகளை ஏற்கவில்லை எனவும் தெரியவருகிறது.
தாழ்ந்த பதவிகளை ஏற்க விரும்பவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர இந்த எம்.பி.க்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கார் கொடுப்பனவு உள்ளிட்ட சலுகைகளுடன் கூடிய பதவிகளை வழங்க முன்மொழியப்பட்ட போதிலும் அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையை அதிகரிக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும்,, பாராளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.