சீனாவுடன் கைக்கோர்கும் சாலமன் தீவுகள் : பதற்றத்தில் பங்காளி நாடுகள்!

தென் பசிபிக் தீவின் பங்காளி நாடுகளுக்கு கவலையை அதிகரிக்கும் வகையில், சாலமன் தீவுகள், சீனாவுடன் ஒத்துழைப்புகளை அதிகரித்து வருகின்றன.
இதன்படி சாலமன் தீவுகள் சட்ட அமலாக்கம், மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் சாலமன் தீவின் பிரதம மந்திரி மனாசே சோகவாரே ஆகியோருக்கு இடையில் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், விரிவான மூலோபாய கூட்டாண்மையை" உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரு தரப்பினரும் ஒத்துழைப்புகளை மேம்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
"சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். சாலமன் தீவுகளின் பொலிஸ் சட்ட அமலாக்கத் திறனை வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் சீனத் தரப்பு வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பங்காளி நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.



