IMF மதிப்பாய்வு முடியும் வரை சீர்த்திருத்தங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியாது - ஷெஹான்!
IMF மதிப்பாய்வு முடியும் வரை சீர்திருத்தங்களில் மாற்றங்களை செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும், மறு ஆய்வு நிலுவையில் உள்ளதால், தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"செப்டம்பருக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வை நாம் எதிர்கொள்ள வேண்டும். அங்கு, உள்நாட்டு கடன் தனியார்மயமாக்கல் திட்டத்தை முடிக்க வேண்டும், வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதை முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு கடனாளர்களுடன் ஒப்பந்தங்களை எந்த அளவிற்கு முடித்துள்ளோம் என்பது முக்கியம் எனத் தெரிவித்த அவர், முதல் ஆய்வு முடியும் வரையில்இதுவரை நடந்த எந்த சீர்திருத்தத்தையும் நம்மால் தலைகீழாக மாற்ற முடியாது எனவும் கூறினார்.
இந்த வருட இறுதிக்குள் வலுவான பொருளாதாரத்தை நாம் கோர முடியும் எனத் தெரிவித்த ஷெஹான் சேமசிங்க " ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.