தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 வர்த்தகர்கள் கைது

#SriLanka #Airport #Lanka4 #Gold
Kanimoli
2 years ago
தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 வர்த்தகர்கள் கைது

திரவ தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 வர்த்தகர்களை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

 கைப்பற்றப்பட்ட திரவ தங்கம் மற்றும் பவுடர்களின் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவரும் இந்த திரவ தங்கப் பொதிகளை விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 8 கிலோ 650 கிராம் எடையுள்ள 23 திரவ தங்க வில்லைகள் மற்றும் தங்கப் பொடி அடங்கிய 10 பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தங்க ஜெல் விலைகள் மற்றும் தங்க தூள் பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!