கப்பலில் ஏற்பட்ட விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மீனவர் வைத்திசாலையில்
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் பலநாள் மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை தரையிறக்கி சிகிச்சைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காலியில் இருந்து 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த சன்” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் காலியிலிருந்து தென்மேற்குப் பகுதியான ஆழ்கடலில் வெளிநாட்டுக் கப்பலுடன் கப்பல் மோதியதில்இ இலங்கையில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவர் மேற்படி வெளிநாட்டுக் கப்பலின் தாக்குதலால் தீக்காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படையினருக்கு அறிவித்துள்ளது.
அதன்படிஇ கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.