இரண்டு விபத்துக்களில் பெண்கள் இருவர் பலி
ஹோமாகம மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம, மகும்புர பிரதேசத்தில் நேற்று முன்தினம்(10ம் திகதி) மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இங்கு ஹோமாகமவில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியைக் கடந்த இரு பெண்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்களும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உடவலவ, வலவெக பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மற்றைய பெண் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றைய விபத்து மவுண்ட் கல்கிஸ்ஸ அத்திடிய வீதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (10ம் திகதி) இரவு பெல்லந்தறையில் இருந்து அத்திடிய பேக்கரி சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் வீதியைக் கடந்த பெண் பாதசாரி ஒருவர் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
71 வயதான பெண் அத்திடிய கவுடானா வீதியில் வசிப்பவராவார். விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மலையக தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.