இந்த வருடத்தில் 6 மாதங்களில் பேஸ்புக் மீது 9858 முறைப்பாடுகள்
இந்த வருடத்தின் (2023) முதல் 6 மாதங்களில் சமூக ஊடகங்கள் (பேஸ்புக்) தொடர்பாக 9858 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல நேற்று 11ம் திகதி தெரிவித்தார்.
மே மாதத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், அந்த எண்ணிக்கை 2330 எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, அம்பாறை, பொலன்னறுவை, காலி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதிகளவான முறைப்பாடுகள் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போலியான முகநூல் கணக்குகளை பயன்படுத்துதல், முகநூல் கணக்குகளை ஊடுருவல், இணையத்தில் வேலை வழங்குவதாகக் கூறி மோசடி செய்தல் போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், 14,570 புகார்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.