அதிகாரம் கிடைத்தால் வரி செலுத்த வேண்டியவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவேன் - சம்பிக்க!
தமக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் கடந்த கால வரிகளுடன் சேர்த்து ஒரு வருடத்திற்குள் கசினோ வரிகளை அறவிடுவது மட்டுமன்றி அதனை செலுத்த வேண்டியவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பாடாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் பேசிய அவர், “வங்கி அமைப்பில் மிகப்பெரிய கடனை அரசாங்கம் வழங்கியுள்ளது. குறிப்பாக மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன இந்த ஆடம்பரத்தை அபிவிருத்தி செய்ய பணத்தை வழங்கியுள்ளன.
கடவத்தையில் இருந்து மீரிகம நெடுஞ்சாலை திட்டத்திற்காக, 6500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கு சீனா ஆதரவளிக்கிறது என்று ஆரம்பித்தது. ஆனால் இறுதியில் நடந்தது என்ன? அரசு வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டது. இந்நாட்டில் வங்கியில் டெபாசிட் செய்த ஒவ்வொருவரின் பணமும் இன்று அந்த சாலையில் வீணாகவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.