டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் சேவையை உறுதிப்படுத்தும் அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டது!
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இணக்கம் தெரிவித்த போதிலும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து புதிய வேலைவாய்ப்பை வழங்குவது கடினமாக இருந்தாலும், இவர்கள் 7 வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்காக 22000 ரூபா கொடுப்பனவின் கீழ் இவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும்,இவர்களின் சேவை உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அது நடைமுறைப்படுத்தப்படாததால் 1105 அதிகாரிகள் பாரபட்சம் அடைந்துள்ளனர்.எதிர்காலத்திலும் இந்த அதிகாரிகளின் உரிமைகளுக்காக போராடுவேன் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.