உதவிவேண்டி நிற்கின்றது மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை!
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபக்ரங்கள் தட்டுப்பாடு காரணமாக மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு நன்கொடையாளர்களின் உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த நன்கொடைகளை பெற்றுக்கொள்வதற்கான முறையான நடைமுறைகள் தற்போது வைத்தியசாலையின் ஒழுங்குப்படுத்தபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வைத்தியசாலையின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வைத்தியசாலையின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நன்கொடைகளை வழங்க முடியும் என மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருந்துகளுக்காக விசேட மருந்து நன்கொடை பிரிவு காணப்படுகிறது. அதேபோல ஏனைய நன்கொடைகளுக்கும் பிரிவுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்