கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கிய கொழும்பு நீதிமன்றம்!

#SriLanka #Court Order
Mayoorikka
2 years ago
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கிய கொழும்பு நீதிமன்றம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப்பொருள் குற்றம் நிரூபிக்கப்பட்ட, வெளிநாட்டவர்கள் 8 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 அவர்களில் 5 பாகிஸ்தானியர்களும், 2 ஈரானியர்களும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 45 கிலோ 654 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஈரானியர்கள் இருவருக்கும், ஐந்து பாகிஸ்தானியர்களுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 அத்துடன், 2016 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஒரு கிலோ 744 கிராம் கொக்கேய்னுடன் கைதுசெய்யப்பட்ட நைஜீரிய பிரஜை ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை தண்டனை விதித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!