TikTok சவால்களால் பறிபோன நான்கு உயிர்கள்

#Death #Social Media #TikTok
Prasu
2 years ago
TikTok சவால்களால் பறிபோன நான்கு உயிர்கள்

உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள TikTok தளத்தில் தற்போது பிரபலமாகப் பின்பற்றப்படும் சவாலில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பது அந்தச் சவாலாகும். 

கடந்த 6 மாதங்களில் அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனல். அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறினார். 

இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் தமது மனைவியும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்தார். அதன் பின் மூவர் அதே விதத்தில் உயிரிழந்துள்ளார். 

TikTokஇல் #boatjumping என்று தேடிப்பார்த்தால் அந்தச் சவாலில் ஈடுபட்டப் பலரின் காணொளிகளைக் காணலாம் என செய்தி வெளியாகியுள்ளது. 

 அந்தச் சவால், பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டாலும் இவ்வாண்டின் தொடக்கத்தில் தான் அது பிரபலமடைந்தது. படகின் வேகமும் குதிப்பவர்கள் தண்ணீரைத் தொடும் விதமும் அவர்கள் தரையில் குதிப்பதைப் போன்ற விளைவுகளை உண்டாக்கும். தலையும் கழுத்தும் பாதுகாக்கப்படவில்லை என்றால் குதிப்பவர்கள் உயிரிழக்கலாம் அல்லது அவர்களின் உடல் நிரந்தரமாகச் செயலிழக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!