தவறுதலாக 13 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்

#Death #Accident #America #baby
Prasu
2 years ago
தவறுதலாக 13 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்

அமெரிக்காவில் தாய் ஒருவர் காரை தன்னுடைய 13 மாத பெண் குழந்தை மீது தவறுதலாக மோதிய சம்பவம் இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.

அமெரிக்காவில் காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ்-வில் தாய் ஒருவர் தன்னுடைய காரை நெருக்கமான பகுதியில் செலுத்தி கொண்டு இருந்த போது தவறுதலாக அவருடைய 13 மாத பெண் குழந்தை மீது காரை செலுத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 13 மாத பெண் குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனின்றி 13 மாத பெண் குழந்தை வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெயர் சைரா ரோஸ் தோமிங் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

 சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்று குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பொலிஸார், விசாரணையில் அரிசோனா பகுதிக்கு அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அருகில் சம்பந்தப்பட்ட தாய் காரை குறுகிய இடத்தில் இயக்கி கொண்டிருந்த போது இந்த விபத்து தவறுதலாக ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!