விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 276 பயணிகள்

#India #Flight #technology #London
Prasu
2 years ago
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 276 பயணிகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் கிளம்பவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 276 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு லண்டனில் இருந்து பயணிகள் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு வந்து, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும். ஆனால் லண்டனில் இருந்து அந்த விமானம் நேற்று காலை சென்னைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு வந்தது.

சென்னையில் இருந்து அந்த விமானத்தில் லண்டன் செல்ல 276 பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 தொழில்நுட்ப கோளாறு பெரிதாக இருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது. தகுந்த நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!