ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்காக தயாரிக்கப்பட்ட விஷேட சொகுசு ரயில் பெட்டி

#Russia #Putin #President
Prasu
2 years ago
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்காக தயாரிக்கப்பட்ட விஷேட சொகுசு ரயில் பெட்டி

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

லண்டனில் உள்ள ரஷிய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷிய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷிய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிறுவனம் புதினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது. ரஷிய ரெயில்வேத்துறை, 

புதின் பயணம் செய்யும் ரெயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து டோசியர் சென்டர் இந்த தகவல்களை பெற்றுள்ளது.

 அந்த ரெயிலின் விவரங்களில், பெட்டி எண் 021-78630 முக்கியத்துவம் பெறுகிறது. இது புதினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்து உயர்ரக வசதிகள் அடங்கியது. இதில் ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது. இந்த பெட்டி தயாரிக்கும் பணிகள் 2018-ல் நிறைவடைந்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!