சதொச நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு கண்காணிப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்
#SriLanka
#Bandula Gunawardana
Prathees
2 years ago
சதொச நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை வர்த்தக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.