தண்ணீர் தொட்டியில் அமுக்கி மகனை தாக்கிய தந்தை பற்றி வெளியான தகவல்
இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவி வரும் சிறு குழந்தையொன்றை நீர்நிலைகளில் வைத்து தாக்கப்படும் காட்சிகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் சில காலங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அமரசிங்க தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் மற்றும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சமூக ஊடகங்களில் சில காலங்களுக்கு முன்னர் பரவிய சில காட்சிகள் மீண்டும் மீண்டும் பகிரப்படுவது வழமையாக காணப்படுவதாகவும், மேற்படி சம்பவத்தின் காட்சிகள் பகிரப்படுவதால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்தார்.