பாகிஸ்தானில் ஜூன் 25 முதல் சமீபத்திய பருவமழையால் 86 பேர் உயிரிழந்துள்ளனர்!

பாக்கிஸ்தான் பருவமழை மழைப்பொழிவை எதிர்கொள்கிறது, இருப்பினும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவற்றின் காரணமாக வெள்ளத்தில் அதிகரிப்பு காணப்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தும், 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஏ.ஆர்.ஒய். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஜூன் 25-ந்தேதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்தும், 151 பேர் காயமடைந்தும் உள்ளனர் என அதுபற்றிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) தெரிவித்து உள்ளது.
அவர்களில் 16 பேர் பெண்கள் மற்றும் 37 பேர் குழந்தைகள் ஆவர். நாடு முழுவதும் தொடர் மழையால், 97 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இவற்றில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையாக 52 பேர் உயிரிழந்து உள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 20 பேரும், பலூசிஸ்தானில் 6 பேரும் உயிரிழந்து உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானில் நடப்பு 2023-ம் ஆண்டில் 72 சதவீத வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கடந்த ஏப்ரலில் தேசிய பேரிடர் மேலாண் கழகம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.
சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இனாம் ஹைதர் கூறுகையில், கடந்த ஆண்டு பாகிஸ்தானை பாதித்ததைப் போன்று நடப்பு ஆண்டில் பெரும் வெள்ளம் ஏற்பட்டால், அது குறிப்பிடத்தக்க பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று என்டிஎம்ஏ தெரிவித்துள்ளது.



