எதிர்காலத்தில் பேருந்து விபத்துக்கள் அதிகரிக்குமென எச்சரிக்கை

#SriLanka #Accident #Bus
Prathees
2 years ago
எதிர்காலத்தில் பேருந்து விபத்துக்கள் அதிகரிக்குமென எச்சரிக்கை

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பேருந்து விபத்துக்களுக்கு புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாமை மற்றும் வீதிகள் மிகவும் மோசமாக காணப்படுவதே காரணம் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 பேருந்துகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் தரத்தில் சிக்கல்கள் உள்ளன எனவே, இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், பஸ் விபத்து ஏற்படும் போது, ​​ஓட்டுனரே பொறுப்பேற்க வேண்டும் என, சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

 மேலும், விபத்து ஏற்படுவதற்கான வேறு காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும் என்றார்.

 அண்மைக்காலமாக பல பஸ் விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு புதிய பேருந்துகளை கொண்டு வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், எனவே பேருந்து தொழிற்துறைக்கு புதிய பேருந்துகள் சேர்க்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!