கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம்
#India
#Tamil Nadu
#Tamil People
#Tamil
#Train
#Tamilnews
Mani
1 year ago

அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென புகை மண்டலம் ஏற்பட்டது. ஒடிசாவில் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ரயிலில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர்.
புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலின் பிரேக்கில் பழுது காரணமாக புகை கிளம்பியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரான பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.



