இலங்கையில் ஆபத்தில் உள்ள நோயாளர்கள் : கவலையில் வைத்தியர்கள்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் ஆபத்தில் உள்ள நோயாளர்கள் : கவலையில் வைத்தியர்கள்!

மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுகூடம் இல்லாததால், தரம் குறைந்த மருந்துகள் சந்தையில் அதிகளவில் புலக்கத்தில் இருப்பதாகவும், இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பெரும்பாலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான பொறிமுறை இலங்கையிடம் இல்லை என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் அனைத்து வகை மருந்துகளின் தரத்தையும் பரிசோதிப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்துடன் கூடிய மேம்பட்ட ஆய்வுகூடத்தை நிறுவுமாறு சுகாதார அமைச்சிடம் கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

ஆனால் அண்மைய நிகழ்வுகள் நோயாளிகள் ஊடாக மருந்துகளின் தரம் பரிசோதிக்கப்படுவதை தெளிவாக்குவதாக  தெரிவித்த வைத்தியர்,  பொருத்தமான வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தர உறுதி ஆய்வகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும்  அவசரகால கொள்வனவுகளின் கீழ் பதிவு செய்யப்படாத மருந்துப் பொருட்களின்கையிருப்பு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளமை மருத்துவ நிபுணர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!