பிரான்ஸில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை வந்தது!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பிரான்ஸில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை வந்தது!

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று (11.07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

 'LORAINE' என்ற கப்பலே  உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் வான் பாதுகாப்பு பல்நோக்கு போர்கப்பலாகும். 

சுமார் 142.20 மீட்டர் நீளம் கொண்ட குறித்த கப்பலில்  154 பணியாளர்கள்  பணியாற்றுகின்றனர்.  இலங்கை வந்த குறித்த கப்பலுக்கு கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர்.  

அதனையடுத்து, கப்பலின் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. 

”லோரெய்ன்' என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் மாலுமிகள் இலங்கையின்  முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.  

இதற்கிடையில், 'லோரெய்ன்' என்ற கப்பல் ஜூலை 15 ஆம் திகதி இலங்கையில் புறப்பட உள்ளது. அங்கு மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!