இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்தவர் நியமனம்!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ் ஜூலை 8 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.
ஃபிராஞ்ச் 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிறந்த நிர்வாகம், உள்ளூர் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக லிபியாவில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.
அத்துடன் 2016 மற்றும் 2021 க்கும் இடைப்பட்ட காலத்தில், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆதரவு அலுவலகத்தில் பணியாற்றினார்.
அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் வளர்ச்சியில் முதுகலைப் பட்டங்களையும், யுனிவர்சிட்டி டி மாண்ட்ரீலில் அரசியல் அறிவியலில் பிஎஸ்சி பட்டத்தையும் பெற்றார்.