நஷ்டஈடு பணத்தை செலுத்த கால அவகாசம் கோரினார் மைத்திரி!
#SriLanka
#Easter Sunday Attack
#Lanka4
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், குறித்த பணத்தை செலுத்த மைத்திரிப்பால சிறிசேன கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில், 54,285 ரூபாவை பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 10 கோடி ரூபாயில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாயை ஹர்ணபூர்ணா அலுவலகத்தில் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எஞ்சிய தொகையை 2024 ஜுன் 30 ஆம் திகதி முதல் 2033 ஆம் ஆண்டு ஜுன் 20 ஆம் திகதிவரை 10 தவணைகளாக செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.