ஜனாதிபதி - இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் சந்திப்பு!
#India
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா உட்பட நான்கு பேர் கொண்ட குழு நேற்று திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்தனர்.
இந்நிலையிலேயே இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா பயணமகவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.