வவுனியாவில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

#SriLanka #Vavuniya #Murder #இலங்கை
வவுனியாவில் மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

வவுனியாவில் கல்மடு - ஈஸ்வரபுரப்பகுதியல் நண்பர் ஒருவரை மற்றவர் தாக்கியதில் கொலையுண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா ஈச்சங்குளப் பொலிஸார் தெரிவித்தனர்.

 வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்தவர் அப்பகுதியிலிருந்து முதலில் தலைமறைவாகியிருந்து இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிசாரிடம் சரணடைந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!