அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் தொடர்பாக தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 10ம் திகதியுடன் முடிவு
#SriLanka
#people
#Lanka4
#Shehan Semasinghe
Kanimoli
2 years ago
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 10ம் திகதியுடன் முடிவடைந்தது.
அதன்படி, இந்த கொடுப்பனவுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 968,000 மேன்முறையீடுகள் மற்றும் 17,500 ஆட்சேபனைகளை பரிசீலிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிசீலிப்பார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கொடுப்பனவுகள் தேவைப்படும் அனைத்து தரப்பினரையும் இனங்கண்டு,
அவர்களை ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவித் திட்டத்தில் உள்ளடக்குவது வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்துகிறார்.