சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் கைது

#SriLanka #Flight #Arrest #Airport #Lanka4 #Gold
Kanimoli
2 years ago
சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

 அதன்படி 1 கிலோ 780 கிராம் தங்கத்துடன் வந்த சந்தேக நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 39 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 வர்த்தகர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ளனர்.

 இதேவேளை, சட்டவிரோதமான முறையில் தங்கம் கையிருப்புடன் வெளிநாடு செல்ல முயன்ற பெண்ணையும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண் 814 கிராம் திரவ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!