13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும்! யாழில் கலந்துரையாடல்

#India #SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும்! யாழில் கலந்துரையாடல்

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

 அதிகார பரவலாக்கம் இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகில் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (15) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும் குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகவேந்தர் பேராசிரியர் சி. பத்தமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 அத்துடன் மேலும் பல சட்டவாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல துறையினர் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிடவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!