மீண்டும் மஹிந்த தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதி
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அதிக அதிகாரத்தைப் பெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவே போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்தார்.
மீண்டும், நாட்டையும், நாட்டின் பலத்தையும், எமது எதிர்கால சந்ததியையும் பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.