மெக்சிகோவின் விற்பனை நிலையத்தில் தீ விபத்து - 09 பேர் பலி!

#world_news #Mexico #Lanka4
Dhushanthini K
2 years ago
மெக்சிகோவின் விற்பனை நிலையத்தில் தீ விபத்து - 09 பேர் பலி!

மெக்சிகோவின் மிகப் பெரிய விற்பனை சந்தையில் விஷமிகள் தீவைத்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மெக்சிகோவில் உள்ள  விற்பனைச் சந்தையில் நேற்று (07.10) தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. 

இருப்பினும் சிசிடிவி காட்சிகளில் ஆயுதம் ஏந்திய சந்தேகநபர்கள் சிலர் திரவமொன்றை ஊற்றுவதைக் காணக்கூயதாக உள்ளது. ஆகவே இந்த தீவிபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளனர். 

டோலுகாவின் சென்ட்ரல் டி அபாஸ்டோஸ் சந்தை நிலையம் மெக்சிகோவின் இரண்டாவது பெரிய சந்தையாகும், இந்த சந்தை பகுதிக்கு தினசரி 26,000 பேர் வந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!