உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
#SriLanka
#Parliament
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய செயற்குழு முன்னிலையில் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நிமல் சிறிபால டி சில்வா,
துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, சுரேந்திர ராகவன், சாமர சம்பத் திஸாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 பேர் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.