இந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல் வந்தாலும் அனுமதிக்க தயார்: அமைச்சர் அதிரடி

#India #SriLanka #Ship
Mayoorikka
2 years ago
இந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல் வந்தாலும் அனுமதிக்க தயார்: அமைச்சர் அதிரடி

இந்தியா அனுமதித்தால் தமிழ்நாடு நாகபட்டினத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களைக் கூட காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுமதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என என துறைமுகங்கள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

 பாண்டிச்சேரி- காங்கேசன்துறை கப்பல் சேவையை எந்த திகதியிலும் தொடங்க இலங்கை தயாராக உள்ளது. இந்தியா அனுமதி வழங்காததினாலேயே இந்த சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 2011இல் இரு நாடுகளும் செய்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு கூட்டுக்கு குழு உள்ளது. இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களுக்கு கப்பல் சேவை வேண்டும். காங்கேசன்துறை துறைமுகத்தில் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். 

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி தமிழ்நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து மாத்திரமே படகு சேவையை முன்னெடுக்க முடியும் . வேறு எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் படகு சேவையை முன்னெடுப்பது தொடர்பாக அவர்கள் எதனையும் கூறவில்லை.

 இந்த விடையத்தில் இலங்கைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை திட்டத்திற்கு யார் ஒப்புதல் அளித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

 நாகப்பட்டினத்தில் இருந்து சேவையை தொடர இந்தியா அனுமதித்ததும் எந்தக் கப்பலையும் நாம் அனுமதிக்க தயார். விடுதலைப் புலிகளின் கப்பலையும் கூட நாம் அனுமதிப்போம் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!