கொழும்பில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் கைது!
#SriLanka
#Colombo
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பில் உயர்தர பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி டிஃபென்டர் ரக ஜீப் ஒன்றை செலுத்திய குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவல மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வசிக்கும் மாணவிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருதானை டீன்ஸ் வீதி, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும் அவர்களின் உத்தரவை மீறி மாணவிகள் வாகனத்தை செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாருக்கும், மாணவிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் குறித்த மாணவிகளை கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.