ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் : ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் : ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அதன் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் அவருடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கூறியுள்ளார். 

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் சஜித் பிரேமதாசவை பிரதமராக முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான பின்னணியில் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தெரிவித்த அவர்,  அவ்வாறு செய்யாமல் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து நிற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!