26 பாதுகாப்பற்ற பாலங்கள் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

#SriLanka #Accident
Prathees
2 years ago
26 பாதுகாப்பற்ற பாலங்கள் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

 தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் பஸ் பயங்கர விபத்துக்குள்ளான மனம்பிட்டி கொட்டாலியா பாலமும் அகலப்படுத்தப்பட வேண்டியதாக அடையாளம் காணப்பட்ட பாலமாகும்.

 எவ்வாறாயினும், சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகலப்படுத்தப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 26 பிரதான பாலங்களும் ஆபத்தான நிலையில் இல்லை என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!