இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராய முடிவு
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.07.06ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன அழைக்கப்பட்டிருந்தன.
2021.01.21 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுவில் இந்த நிறுவனங்கள் தொடர்பில் வழங்கிய அறிவுறுத்தல்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இதில் ஆராயப்பட்டன. 2020-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நுகர்வுக்காக 187,623 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் மற்றும் 225,510 மெற்றிக் தொன் பாம் ஒயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், நாட்டில் தேங்காய் எண்ணெய் பாவனையில் 22% உள்ளூர் உற்பத்தியிலும் 78% இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயிலும் ஈடுபடுத்தப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது எனக் கலந்துரையாடப்பட்டது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி, தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, நுகர்வோர் அதிகாரசபை, சுகாதார அமைச்சு போன்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.