சட்டவிரோதமான முறையில் நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர்
கைது இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று காலை அவரை கைது செய்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள் எனவும், அடிக்கடி விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று அதிகாலை 02.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்தியன் எயார்லைன்ஸைச் சேர்ந்த ஏ.ஐ. 273 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களின் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 0.1 கிலோ 780 கிராம் நிறையுடைய நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவர் மற்றும் அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.