ஜனாதிபதி தேர்தல் எப்பொழுது? ஜனாதிபதியின் முக்கியஸ்தர் வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த வருடம் எந்த வகையிலும் தேர்தல் நடத்தப்படாவிட்டாலும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சமன் ரத்னப்பிரிய, 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்றும் அதில் முதலாவது தேர்தல் ஜனாதிபதி தேர்தலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களாணையை பெற்ற ஜனாதிபதியாக, தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்