சில நாணய மாற்று நிறுவனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுத்த மத்திய வங்கி!
நாணய மாற்று உரிமை நிபந்தனைகளுக்கு கட்டுப்படாத 15 நாணய மாற்றுநர்களின் உரிமங்களை புதுப்பிக்காதிருப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானம் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி குறித்த நாணய மாற்றுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான நாணய மாற்று உரிமத்தின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த 15 நிறுவனங்கள் இனி பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களுடன், வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்றல் மற்றும் பரிமாற்றம் செய்தல், 2017 ஆண்டின் 12ஆம் இலக்க அந்நியச் செலாவணி சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது