முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நோட்டீஸ்
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழியை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதாவது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி விஷாக பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் தலைமையிலான மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, அரசியல் பழிவாங்கல்களை விசாரித்த விசாரணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த மனு மீது செப்டம்பர் 11ஆம் திகதி அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபிட்ட செய்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அரசியல் பழிவாங்கும் நோக்கில் விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து தனக்கு அழைப்பாணை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
. அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நிஷ்ஷங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதிராக செயற்படப்போவதில்லை என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் உறுதியளித்ததாக ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான பல பரிந்துரைகளும் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரதிவாதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நடவடிக்கையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு அந்த மனுவில் ஷானி அபேசேகர கோரியுள்ளார்.