மன்னம்பிட்டிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
#SriLanka
#Accident
#Bus
#Lanka4
Thamilini
2 years ago
மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பேருந்தானது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.