அமெரிக்கா அத்துமீறினால் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் - வடகொரியா எச்சரிக்கை!
#world_news
#NorthKorea
#Lanka4
Dhushanthini K
2 years ago

அமெரிக்கா தனது பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்தால், தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரிய தலைவரின் சகோதரியான சிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு விமானங்கள் மூலம் அமெரிக்கா தனது வான்வெளியில் அத்துமீறியதாக கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி இன்றைய தினம் (10.07) அமெரிக்க உளவு விமானம் வடகொரியாவின் பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்ததாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இவ்வாறான ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தை அணுசக்தி மோதலுக்கு கொண்டுச் செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



