தனது காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர்

#SriLanka #Arrest
Prathees
2 years ago
தனது காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர்

ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் 08.07.2023 அன்று சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் காரிலிருந்து சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்கும் இடத்தை சரிபார்க்குமாறு உரிமையாளரிடம் கூறிய நபர்ஈ காருடன் தப்பியோடிவிட்டார்.

 குறித்த நபர் காதலியின் பிறந்தநாளை ஆச்சரியப்படுத்தும் வகையில் காரை கடத்தியதாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கடுவெலஇ கீழ் பொமேரியாவைச் சேர்ந்தவராவார். ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!